Skip to content
Facebook X Instagram
  • English
  • සිංහල
  • தமிழ்
Dop logo


Opening Hour:
Mon -Sun,8:00 - 16:30
|
Call Us:
1950/+94 112328301-3
|
Email Us:
info@slpost.lk
|
Address:
Postal Headquarters,01000
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை
Facebook X Instagram
Dop logo
  • English
  • සිංහල
  • தமிழ்

e-டெலிமெயில் சேவை

Send Your Urgent Messges with Telemail Service

Send your urgent messages swiftly with Sri Lanka Post Telemail Service.

e–டெலிமெயில்

அவசரச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்காகத் தற்போதுள்ள டெலிமெயில் சேவை மேலும் துரிதப்படுத்தப்பட்டு  மற்றும், நெறிப்படுத்தப்பட்டு இணையம் வழியாகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்காக, e-டெலிமெயில் சேவை 2015.12.01 திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட டெலிமெயில் சேவையைப் பெரும்போது பின்பற்ற வேண்டிய படிகள் இந்தச் சேவையைப் பெறும்போதும் பின்பற்ற வேண்டும் என்பதோடு. தற்போதுள்ள கட்டணங்கள் மற்றும் கட்டணம் அறவிடுவதில்  எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரே செய்தியைப் பல பெறுநர்களுக்கு அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் செய்தி மற்றும் பெறுநர் முகவரிகள் அடங்கிய பட்டியலை MS Excel கோப்பாக அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

விசேட சேவைகள்.
➢ விநியோகத்தை உறுதிப்படுத்தும் டெலிமெயில்  செய்திகள்
➢பதிலுக்குக் கட்டணம் செலுத்தும்  டெலிமெயில்  செய்திகள்
இந்தச் சேவைகள் தேவையா இல்லையா என்பது பற்றி TM 01 படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

அறவிடப்படும் கட்டணம்

➢ செய்தியின் முதல் 10  சொற்கள்வரை – ரூ.50.00
➢மேலதிக ஒவ்வொரு சொற்களுக்கும் – ரூ. 5.00
➢ நிலையான கட்டணம் – ரூ.50.00
➢ விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையாயின் – Rs.30.00
➢ அனுப்பப்பட்ட மூல  செய்தியின் சான்றளிக்கப்பட்ட நகலுக்கு – ரூ.100.00
(அனுப்புநர் / பெறுநரின் வேண்டுகோளின் பேரில்)

கட்டணம் அறவிடப்படுதல்.

➢செய்தியில் உள்ள சொற்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும், பெயர்கள் மற்றும் முகவரிகளுக்குக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
➢Iவிநியோகம் உறுதிப்படுத்தல் தகவல் தேவையாயின் அல்லது பதிலுக்குக் கட்டணம் செலுத்தும் சேவை தேவையாயின், அதற்கான கட்டணம்  ஆரம்ப அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.
➢பெறப்பட்ட பணத்திற்கான பற்றுச்சீட்டு TM 3 (மாதிரி – 02) பிறதியுடன் வழங்கப்படும்.

Telemail service history ?

அவசர மற்றும் எழுத்துப்பூர்வ செய்திகளை அனுப்புவதற்கான டெலிமெயில் சேவை 2001-04-02 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்பட்டு வந்த தந்தி (Telegram) சேவைக்கு இணையாக டெலிமெயில் சேவையும் செயல்படுத்தப்பட்டது.தந்தி சேவை 2013-10-01 திகதி முதல் நிறுத்தப்பட்டதோடு பொது நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 24/2013 மூலம் டெலிமெயில் செய்திகள் தந்திகளைப் போலவே சம அங்கீகாரம். கொண்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளரால் கருமபீடத்தில் கையளிக்கப்படும் அவசரச் செய்தியொன்று அந்த நேரத்திலேயே நேரடித் தொலைபேசிமூலம் சேருமிட அலுவலகத்திற்கு பரிமாறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் உரிமையாளருக்கு வழங்கப்படும் சேவையாகும்.

டெலிமெயில் செய்திகளைப் பெறுதல்?
  • ஏதேனும் அஞ்சல் அலுவலகம் அல்லது உப அஞ்சல் அலுவலகத்தினால் விநியோக வசதியுடன் கூடிய எந்தவொரு அஞ்சல் அலுவலகம் அல்லது உப அஞ்சல் அலுவலகம் ஊடாக முகவரியிடப்பட்ட  டெலிமெயில்  செய்திகளைப் பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
  • அனுப்புனரின் செய்திகள் மற்றும் அது தொடர்பான ஏனைய விபரங்கள் TM 01 (மாதிரி-01) என்ற டெலிமெயில்  செய்திகள் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்கப்பட வேண்டும்.
  • மாதிரி 01  இல் பகுதி A வாடிக்கையாளர்கள்மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதோடு   பகுதி B  அலுவலக பயன்பாட்டிற்காகும்.
  • பெறுநரின் பெயர் மற்றும் முகவரி சரியாகவும் தெளிவாகவும் எழுதப்பட வேண்டும்.
  • உரிய இடத்தில் செய்திகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • டெலிமெயில் செய்தியில்  ஆபாசமான, அவமதிப்புக்குரிய மற்றும் முரட்டுத்தனமான வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  • செய்திகள் பதிவு செய்யப்பட்டு உண்மையான கையொப்பம் இடப்பட வேண்டும்.
  • அஞ்சல் அதிபர் / கருமபீட உத்தியோகத்தர் மூலம் டெலிமெயில் செய்தியை வழங்கும் நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோரும்போது, ​​அடையாளம் மற்றும் ஒப்படைக்கப்படுவது ஒரு முகவரால் செய்யப்பட்டால், அனுப்புநரின் அதிகாரம் பெறப்பட்ட விதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
டெலிமெயில் செய்திகளை விநியோகித்தல். ?

➢TM 01 இல் குறிப்பிடப்பட்டுள்ள பெறுநரின் முகவரிக்கு டெலிமெயில் செய்தி விநியோகிக்கப்படும். விநியோகிக்கப்படும்போது அதைப் பெறுபவரின் கையொப்பம் பெறப்படும். பதிலுக்குப் பணம் செலுத்தப்பட்டிருந்தால், அஞ்சல் அதிபரால் கையொப்பமிடப்பட்டு தேதியிடப்பட்ட TM 02 (மாதிரி – 03) படிவம் செய்தியுடன் பெறப்படும். அதில் பெறுநரின் செய்தியைப் பதிவு செய்து கையளிக்கப்பட வேண்டும்.

விநியோகிக்கப்படாத டெலிமெயில் செய்திகள்?

➢டெலிமெயில் செய்திகள் உரிமையாளருக்கு வழங்கப்படாத சந்தர்ப்பங்களில், டெலிமெயில் செய்திகள் வழங்கப்படாததற்கான காரணத்தைக் குறிப்பிட்டு படிவம் TM 6 (மாதிரி – 04) மூலம் அறிவிக்கப்படும்.

தொலைபேசி இலக்கங்கள்,
  • சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு – 011 2695372
  • தகவல் தொழில்நுட்பப் பிரிவு – 011 2542104/011 2334728/011 2335978
  • வணிக வாட்ஸ்அப் இலக்கம் – 070 2847623
  • துரித அழைப்பு இலக்கம்– 1950
மின்னஞ்சல் முகவரி
  • சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு – supdt.mkt@slpost.lk
  • தகவல் தொழில்நுட்பப் பிரிவு – info.it@slpost.lk
Download User Manual >>
No Tracking available
Contact Details
  • 1950/+94 112328301-3
  • No.310, D.R Wijewardhena MW,Colombo 01000
  • info@slpost.lk
More Links
  • Ministry of Mass Media
  • President of Sri Lanka
  • President Media Division
  • Presidential Secretariat
Quick Links
  • About Us
  • Contact Us
  • Services
  • Terms & condition
  • Support

Last Update Date:-2026-03-27

Facebook Twitter Instagram YouTube

© 2026 இலங்கை தபால்

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை

  • English
  • සිංහල
  • தமிழ்
Search