விளம்பர அஞ்சல் சேவை.
விளம்பர அஞ்சல் சேவை.
வணிக சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இலக்கு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வணிகங்கள் மற்றும் தயாரிப்புகள்குறித்து தெரிவிக்க, விளம்பரங்கள், பிரசுரங்கள், விளம்பரத் தகவல்களைக் கொண்ட கடிதங்கள், வர்த்தக மாதிரிகள் போன்றவற்றுக்கான மிகவும் மலிவு கட்டண அடிப்படையில் முகவரியற்ற விநியோக சேவைகளை விளம்பர அஞ்சல் சேவைமூலம் நடைபெறுகின்றது.
விளம்பர அஞ்சல் பொருட்களைப் விநியோகித்தல்
- விளம்பரம் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடிதங்களை விநியோகிக்கும் அஞ்சல் அலுவலகத்திற்கு, தொடர்புடைய வணிக நிறுவனம் விளம்பர துண்டுப் பிரசுரங்களை வழங்க வேண்டும்.
- விளம்பர துண்டு பிரசுரங்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஆயிரம் (1000) அல்லது அதற்கு மேற்பட்டிருத்தல் வேண்டும்.
விநியோகத்திற்காக ஏற்றுக் கொள்ளப்படும் விளம்பர அஞ்சல் பொருட்கள்
- அச்சிடப்பட்ட விளம்பரம், துண்டுப் பிரசுரங்கள்
- விளம்பரத் தகவல்கள் அடங்கிய கடிதங்கள்
- வாடிக்கையாளர் ஆய்வுகள் மற்றும் போட்டிகள் முதலியன தொடர்பான துண்டுப்பிரசுரங்கள்,
- வர்த்தக மாதிரிகள்
அரசியல் கட்சிகளின் பிரச்சார கடிதங்களை இந்தச் சேவையின் கீழ் அனுப்ப முடியாது. மேலும், அஞ்சல் பொருட்கள் அஞ்சல் அலுவலக விதிமுறைகள் மற்றும் அஞ்சல் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான அளவுகளுக்கு இணங்க வேண்டும்.
அதிகபட்ச எடை.
- ஒரு விளம்பர துண்டுப்பிரசுரம் அல்லது தொகுப்பின் எடை – 100 g
- ஒரு வர்த்தக மாதிரியின் எடை – 100 g
கட்டணம்
|
|
| |||
|---|---|---|---|---|---|
20g | ரூ.6000.00 | ரூ.5000.00 | |||
40g | ரூ.7000.00 | ரூ.6000.00 | |||
60g | ரூ.8000.00 | ரூ.7000.00 | |||
80g | ரூ.9000.00 | ரூ.8000.00 | |||
100g | ரூ.10000.00 | ரூ.9000.00 |
வர்த்தக மாதிரிகளுக்கு.
| 1g-100g |
|
| ||
|---|---|---|---|---|
பெறப்பட்ட மாதிரிகள் அதே அலுவலகத்திலிருந்து விநியோகம் செய்யப்படுமாயின. | ரூ.20,000.00 | ரூ.15,000.00 | ||
பெறப்பட்ட மாதிரிகள் சேருமிட அலுவலகங்களினால் விநியோகம் செய்யப்படுமாயின் | ரூ.30,000.00 | ரூ.25,000.00 |
விளம்பர அஞ்சல் சேவைக்கு விண்ணப்பித்தல்
- விளம்பர அஞ்சல் சேவையின் கீழ் விநியோகத்திற்காக நோக்கம் கொண்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு துண்டுப்பிரசுரம் அல்லது வர்த்தக மாதிரி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையத்தின் அஞ்சல் அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். (இணைப்பு 01)
- பிரதி அஞ்சல் அதிபதி அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட ADM இலக்கம் மற்றும் செல்லுபடியாகும் காலம், ஒவ்வொரு விளம்பர துண்டுப்பிரசுரம் / மாதிரியிலும் குறிப்பிடப்பட்டு அச்சிடப்பட வேண்டும்.
கட்டணம் செலுத்துதல்
- விளம்பர அஞ்சல் பொருட்கள் அஞ்சல் அதிபரிடம் கையளிக்கும்போது விளம்பரப் பொருட்களின் எண்ணிக்கை தொடர்புடைய கட்டணங்களைச் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
விளம்பர அஞ்சல் பொருட்களைப் விநியோகித்தல்
- விநியோகத்திற்கான ஒப்புதல் பெறப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் விளம்பர துண்டுப்பிரசுரம் / மாதிரிகள் விநியோகித்து முடிக்கப்படும்.
தொலைபேசி இலக்கங்கள்,
- சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு – 011 2695372
- ஒருங்கிணைப்பு பிரிவு – 011 2325565
- துரித அழைப்பு இலக்கம்– 1950
மின்னஞ்சல் முகவரி
- சந்தைப்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு – supdt.mkt@slpost.lk
- ஒருங்கிணைப்பு பிரிவு – supdt.lis@slpost.lk
