EMS சேவை (அதிவேக அஞ்சல் சேவை)
EMS சேவை (அதிவேக அஞ்சல் சேவை)
ஆவணங்கள் மற்றும் வணிகப் பொருட்களுக்கான விரைவு அஞ்சல் சேவையான EMS என்பது, முடிந்தவரை அதிவேகமாகக் கிடைக்கப் பெறச் செய்யக்கூடிய அஞ்சல் சேவையாகும்.
அனைத்து அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களிலும் EMS பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
*விலைகள், எடை மற்றும் சேருமிட நாடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக, சேருமிட நாட்டின் அதிகாரப்பூர்வ அஞ்சல் வலைத்தளங்களால் வழங்கப்படும் நிலையை அறிந்து கொள்ளும் சேவைகளையும் பயன்படுத்தலாம்.
ஆவணங்களை உறுதியான உறையில் அனுப்ப வேண்டும். (குறைந்தபட்ச அளவு A4)
EMS பார்சல்களை வலுவான மற்றும் அடர்த்தியான காகிதப் பெட்டியில் அடைக்க வேண்டும்.
EMS பார்சல்களின் அளவு
அளவுகள் சேருமிட நாட்டின் ஒழுங்குமுறைகளைப் பொறுத்தது.
அளவுகளின் வரம்புகள்:பார்சலின் மிகப்பெரிய பக்கத்தின் அதிகபட்ச நீளம்:
இது 100 செ.மீ அல்லது 150 செ.மீ இருக்கும். பார்சலின் அதிகபட்ச நீளம் சேருமிட நாட்டைப் பொறுத்தது. (அதிகபட்ச நீள அளவுகளுக்குக் கீழே உள்ள நாடுகளின் பட்டியலைப் பார்க்கவும்.)
பார்சலின் அதிகபட்ச அளவு:
பார்சலின் அதிகபட்ச அளவு = சுற்றளவு + நீளம்
பார்சலின் அதிகபட்ச அளவு சேரும் நாட்டைப் பொறுத்தது. (அதிகபட்ச நீள அளவுகளுக்குக் கீழே உள்ள நாடுகளின் பட்டியலைப் பார்க்கவும்)
நாடுகளின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலைப் பெற கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
கையாளுதல் மற்றும் போக்குவரத்தில் தாக்குப் பிடிக்கும் வகையில் அனைத்து பொதிகளும் வலுவான மற்றும் பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டுள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பலவீனமான மற்றும் திருப்தியற்ற முறையில் பொதியிடப்பட்டிருத்தல், பொதிக்குச் சேதம் ஏற்படுவதற்கு அல்லது பொதியை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கு காரணமாக அமையும்.
- ஒரு EMS பொருள் சேருமிடத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டால் (விநியோகிக்க முடியாமல் போன பிறகு), அஞ்சல் கட்டணம் மீளச் செலுத்த முடியாது. விநியோகம் செய்யப்படாத EMS பொருளை அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டிய அவசியம் இல்லையாயின், தயவுடன் CN23 படிவத்தில் “வினியோகம் செய்யப்படவில்லை என்ற” பிரிவில் “கைவிடப்பட்டதாகக் கருதுங்கள்” என்ற பெட்டியில் ☑ குறி இடவும். (சில நாடுகள் திருப்பி அனுப்பல் கட்டணம் அறவிடப்படுவதால்)
வினவல்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட தினத்திலிருந்து 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
EMS தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஏதாவது முறைப்பாடுகளின் போது அவசியமாகும் என்பதனால், CN23 படிவத்தின் வாடிக்கையாளரின் பிரதியைக் கவனத்துடன் அருகில் வைத்திருக்க வேண்டும்.
- இலங்கைக்கு வரும் அனைத்து EMS அஞ்சல் பொருட்களும் சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுகின்றன.
- சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட EMS பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
- சுங்க ஆய்வுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும்.
- கொழும்பு EMS மையம், கண்டி, காலி, யாழ்ப்பாணம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு மண்டலம் மற்றும் திருகோணமலை அஞ்சல் அலுவலகங்களில் சுங்கப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- சுங்க ஆய்வுக்குப் பிறகு, உள்ளடக்கங்கள் வரிக்கு உட்பட்டவை என்று சுங்கம் தீர்மானித்தால், சுங்கப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
- உங்களுக்குச் சுங்க ஆய்வு மையங்களுக்குச் சமூகமளிக்க முடியாதாயின், சம்பந்தப்பட்ட படிவங்களைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு, அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு பொருட்களை அனுப்ப முடியும் என்பதுடன், தொடர்புடைய கடிதத்தைச் அனுப்ப வேண்டிய சுங்க ஆய்வு மையத்திற்கு அனுப்பிய பிறகு, சம்பந்தப்பட்ட சுங்கக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, உரிய அஞ்சல் அலுவலகத்தின் மூலம் பொருட்களைப் பெறலாம்.
EMS மையம், மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம், கொழும்பு 01000
தொலைபேசி: +94-11-2328644, +94-11-244744
பிராந்திய வெளிநாட்டு பார்சல் அலுவலகம், அஞ்சல் கட்டிடத் தொகுதி, கண்டி.
தொலைபேசி: +94-81-2234071
பிராந்திய வெளிநாட்டு பார்சல் அலுவலகம், அஞ்சல் கட்டிடத் தொகுதி, காலி
தொலைபேசி: +94-91-2233221
பிராந்திய வெளிநாட்டு பார்சல் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், திருகோணமலை.
தொலைபேசி : +94-26-2222372
பிராந்திய வெளிநாட்டு பார்சல் அலுவலகம், அஞ்சல் கட்டிடத் தொகுதி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி : +94-21-2222415
பிராந்திய வெளிநாட்டு பார்சல் அலுவலகம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு மண்டலம், கட்டுநாயக்க .
தொலைபேசி : +94-11-2252762
துரித அழைப்பு – 1950
EMS மையம்,
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம்,
கொழும்பு 01000,
தொலைபேசி:+94-11-2320700,2440159–Ext:-201
தொலைபேசி:+94112447844, 2328644
ems.colombo@yahoo.com
as.fgn@slpost.lk
அஞ்சல் தலைமையகம் (சர்வதேச அஞ்சல் சேவைகள் பிரிவு)
011-2328301
info@slpost.lk
