அஞ்சல் பொருட்களைத் திருப்பி அனுப்புதல்
அஞ்சல் பொருட்களைத் திருப்பி அனுப்புதல்
அஞ்சல் பொருளை அஞ்சல் அலுவலகம் அல்லது முகவரியாளரின் முகவர் மூலம் விநியோகத்தின் பிறகு, முகவரியாளருக்கு அதைக் கிடைக்கப்பெறும் வகையில் அதிகாரப்பூர்வமாக வேறு முகவரிக்குத் திருப்பி அனுப்பும் செயலாகும்.
- கடிதம் /அஞ்சலட்டை/திறந்த அச்சிடப்பட்ட /ாக்கெட்டுகள்/செய்தித்தாள்கள்/பார்சல்/பதிவு அஞ்சல் பொருட்கள்
ஒரு அஞ்சல் பொருள் மேலதிக கட்டணம் எதுவுமின்றி திருப்பி அனுப்பப்படலாம், ஆனால் அப்பொருள் விநியோகம் செய்யப்பட்ட நாளிலோ அல்லது அதற்கு மறுநாளிலோ (ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) முகவரியாளரின் முகவரால் மீண்டும் அஞ்சலிடப்பட்டால் மட்டுமே திருப்பி அனுப்பப்படும்.
திருப்பி விடப்படும் பொருட்கள் திறக்கப்பட்டிருக்கவோ அல்லது சேதப்படுத்தப்பட்டிருக்கவோ கூடாது. முகவரியாளரின் பெயர் எந்த வகையிலும் மாற்றப்பட்டிருக்கக் கூடாது. ஒரு புதிய முகவரியை உடைய லேபிள் ஒட்டப்படுவதாயின், அது ஆரம்ப முகவரியாளரின் பெயரை மறைக்கப்படாத வகையில் ஒட்டப்பட வேண்டும். அது மறைக்கப்பட்டால், அது கட்டணம் செலுத்தப்படாத பொருளாகக் கருதப்பட்டு, மேலதிக கட்டணம் அறவிடப்படும்.
மேற்கூறிய காலத்திற்குப் பிறகு பொருள் திருப்பி அனுப்புவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டால், அல்லது மீள அஞ்சலிடுவதற்கு முன் திறக்கப்பட்டு அல்லது சேதப்படுத்தப்பட்டு இருப்பின், அது புதிதாக அஞ்சலிடப்படும் பொருளாகக் கருதப்பட்டு பொருந்தக்கூடிய வகைக்கு ஏற்ற கட்டணம் அறவிடப்படும்.
பதிவு செய்யப்பட்ட அஞ்சல் பொருட்கள் அஞ்சல் பெட்டிகளில் இடப்படக் கூடாது. அவற்றை அலுவலக கருமபீடத்தில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் முந்தைய பதிவு இலக்கமே மீள அனுப்பலுக்கும் பயன்படுத்தப்படும். உரிய தேதிக்குப் பிறகு பொருள் சமர்ப்பிக்கப்பட்டால், அது புதிய பொருளாகக் கருதப்படுவதுடன், புதிய கட்டணம் அறவிடப்பட்டு புதிய பதிவு இலக்கத்தின் கீழ் அனுப்பப்படும்.
வெளிநாட்டு முகவரிக்கு இடம்பெயர்ந்த ஒருவருக்குச் சொந்தமான பொருட்கள் அவருக்குத் திருப்பி விடப்படும். அனுப்புனரால் சேருமிட நாட்டின் பெயர் தெரிந்த மொழியில் பொருளின் முகவரி பக்கத்தில் எழுதப்பட்டிருந்தால் அப்பொருள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
ஒரு பொருள் விதிமுறைகளுக்கு இணங்குவதாக அஞ்சல் அதிபதியினால் தீா்மாணிக்கப்பட்டால் மட்டுமே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும்.
