Skip to content
Facebook X Instagram
  • English
  • සිංහල
  • தமிழ்
Dop logo


Opening Hour:
Mon -Sun,8:00 - 16:30
|
Call Us:
1950/+94 112328301-3
|
Email Us:
info@slpost.lk
|
Address:
Postal Headquarters,01000
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை
Facebook X Instagram
Dop logo
  • English
  • සිංහල
  • தமிழ்

SLPOST COURIER சேவை

Calculate Postage >>
Tracking Individual Items >>
Tracking List Items >>
SLPOST COURIER சேவை என்பது ?

அஞ்சல் திணைக்களத்தினால் சந்தையில் நிலவுகின்ற போட்டித் திறனுக்கு மற்றும் பொதுமக்களுக்கு தாக்குப் பிடிப்பதற்கு உகந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட  வேகமான விநியோகம் மற்றும் விசேட கவனத்துடன் கூடிய  சேவையாகும். பொருட்கள் பெறப்படும் அலுவலகம் கடித விநியோகத்தை உடைய அலுவலகமாயின் அவ் விநியோக எல்லைக்குள்  24 மணி நேரத்திற்குள்ளும், பொருட்கள் பெறப்படும் அலுவலகத்திற்கு வெளியே  உள்ள விநியோக பகுதிகளுக்கு 48 மணி நேரத்திற்குள்ளும்   விநியோகிப்பது இச்சேவையின் நோக்கமாகும்.

இச்சேவையின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள்??
  • நிலையினை தெரிந்து கொள்ளும் வசதிகள்
  • வீட்டிற்கே பெற்றுக்கொள்ளும் வசதி
  • விநியோகிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வசதி
  • மொத்தமாக பொருட்களை படைப்பவர்களுக்கு வங்கி / பண உத்தரவாதத்தின் கீழ் பின்னர் செலுத்தும் கட்டண வசதிகளை வழங்குதல் (உ+ம:-. உயர்தர வகுப்பு பயிற்சிகள்)
இந்த சேவையின் கீழ் அனுப்பக்கூடிய பொருட்கள் ?
  • அஞ்சல் திணைக்களத்தின் விதிமுறைகள் மற்றும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள்/அறிவுறுத்தல் கடிதங்கள் மூலம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நிலையான அளவுகளுக்கு இணங்காத பொருட்கள் தவிர்ந்த  ஏனைய பொருட்கள்  அஞ்சலுக்காக  பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருத்தல்.
  • அனுப்பக்கூடிய அதிகபட்ச எடை 40 Kg ஆகும்.
அஞ்சல் மூலம் அனுப்புவதற்காக பொருட்களை ஒப்படைக்கக்கூடிய முறைகள்??

அஞ்சல் /  உப அஞ்சல்  அலுவலக கருடமபீடங்களில் தனிப்  பொருளாகவோ அல்லது பட்டியலாகவோ ஒப்படைக்கலாம்.

SLPOST COURIER சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது ?
SLPOST COURIER சேவைக்கு பதிவு செய்வதற்கு தேவையில்லை.
(பட்டியல் வடிவத்தில் அஞ்சல் அலுவலகத்திற்கு பொருட்களை வழங்கும் நிறுவனங்கள் /  நபர்களுக்கு தேவையாயின் பதிவு செய்யலாம்.).
கட்டணங்கள் அறவிடப்பட வேண்டிய முறை ?

SLPOST COURIER சேவைக்கு உரிய கட்டண அட்டவணைக்கு ஏற்ப கட்டணங்கள் அறவிடப்பட வேண்டும்.

எடை (கிராம்) W

கட்டணம்   (ரூ.) 

0 < W ≤ 250

200.00

250 <W ≤ 500

250.00

500 < W ≤ 1000

350.00

1000 < W ≤ 2000

400.00

2000 < W ≤ 3000

450.00

3000 < W ≤ 4000

500.00

4000 < W ≤ 5000

550.00

5000 < W ≤ 6000

600.00

6000 <W ≤ 7000

650.00

7000 < W ≤ 8000

700.00

8000 < W ≤ 9000

750.00

9000 < W ≤ 10000

800.00

10000 < W ≤ 15000

850.00

15000 < W ≤ 20000

1100.00

20000 < W ≤ 25000

1600.00

25000 < W ≤ 30000

2100.00

30000 < W ≤ 35000

2600.00

35000 < W ≤ 40000

3100.00

பொருட்களை பொதியிடும் முறை.?
  • இந்தக் கூரியர் சேவை மூலம் 40Kg வரையிலான அதிக எடையுள்ள பொருட்களையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதால், பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது, கையாளுவதற்கு மற்றும்  விநியோகிப்பதற்கு  எளிதான வகையில், அஞ்சல் அலுவலக விதிமுறைகள் மற்றும் அஞ்சல் வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான வரம்புகளுக்குள் (நீளம், அகலம், உயரம்) பொருட்களை  பெற்றுக்கொள்ளல்  வேண்டும்.
  • பார்சலின் உள்ளடக்கங்களுக்கு சேதம் ஏற்படுவதையோ அல்லது அதன்மூலம் ஏனைய அஞ்சல் பொருட்களுக்கு சேதம் ஏற்படுவதை  தவிர்ப்பதற்காக, அதை ஒரு வலுவான பெட்டியினுள் அல்லது உறையில் பொதியுடப்பட வேண்டும்.
  • கடிதம்/பார்சலின் இடது பக்கத்தில் அனுப்புநரின் பெயர் மற்றும் முகவரியும், வலது பக்கத்தில் பெறுநரின் பெயர் மற்றும் முகவரியும் எழுதப்பட வேண்டும் என்பதுடன், பெறுநரின் முகவரியுடன் தொலைபேசி  இலக்கம் இருந்தால், அதைப் பெறுநரின் முகவரிக்குக் கீழே குறிப்பிட வேண்டும்.
  • அஞ்சல் பொருட்களின் சேருமிட அலுவலகத்தை எளிதாக அடையாளம் கண்டுகொள்வதற்கும், அதன் மூலம் தாமதமின்றி உரிமையாளருக்கு அஞ்சல் பொருளை கையளிப்பதற்கும் பெறுநரின் முகவரியில் சேருமிட அலுவலகத்திற்கு கீழே குறிப்பிட்ட அஞ்சல் குறியீட்டு இழக்கத்தை கட்டாயமாக  குறிப்பிடப்பட வேண்டும்.
  • SLPOST COURIER சேவைக்கான பார்கோடு லேபிளை ஒட்டுவதற்கும், பெறப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் இரப்பர் முத்திரையை பதிப்பதற்கும் பொருட்களின் இடது மேல்  மூலையில் ஒரு தெளிவான இடம் இருக்க வேண்டும்.
பெறுநருக்கு பொருட்களை வழங்குதல்?
  • SLPOST COURIER பொருளைப் பெற்றுக்கொண்ட அஞ்சல்/ உப  அஞ்சல் அலுவலகம் கடித விநியோகம் கொண்ட அலுவலகமாக இருந்தால், உரிய அலுவலகத்தின் கடித விநியோக எல்லைக்குள் 24 மணி நேரத்திற்குள்ளும், பெற்றுக்கொண்ட அலுவலகத்திற்கு அப்பால் உள்ள அலுவலகத்தில் 48 மணி நேரத்திற்குள்ளும் விநியோகம்  செய்யப்படும்.
  • SLPOST COURIER சேவையின் கீழ் பெறப்படுகின்ற பொருட்கள் பற்றிய தகவல்கள், அவை அஞ்சல் அலுவலகத்தில் பெறப்பட்டதிலிருந்து உரிமையாளருக்கு வழங்கப்படும் வரை, அந்த நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட மென்பொருளில் உள்ளிடப்படுகின்றன.
  • பயண முடிவு அலுவலகத்திற்கு பெறப்படும் 20 Kg வரையிலான பொருட்கள் அஞ்சலர் / தந்தித் தூதுவர் மூலம் பெறுநரின் முகவரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு  கையளிக்கப்படும். 20 Kg க்கு மேல் மற்றும் 40 Kg வரையிலான எடையுள்ள பொருட்கள் என்றால், சேருமிட அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு பொருளின் உரிமையாளருக்கு அறிவிக்கப்படும். (கருமபீடத்தில் பொருட்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் அனுப்புநருக்கு இது குறித்து அறிவிக்கப்படும்.)
  • SLPOST COURIER பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெறுநருக்கு பொருளை விநியோகிக்க மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • பொருட்களைப் விநியோகிக்க மூன்று முறை முயற்சித்த பிறகும் விநியோகிக்க முடியாத SL POST COURIER பொருட்களினது , விநியோகிக்க முடியாததற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிடப்பட்டு அப்பொருளை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சேவை தொடர்பான முறைப்பாடுகள் / கோரிக்கைகளை எவ்வாறு செய்வது. ?
  • பொருட்கள் தாமதமாக விநியோகிக்கப்படல் / இழப்பு / சேதம் என்பது குறித்த தகவல்களை, பொருட்கள் விநியோகம் செய்யப்படும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
  • மேலதிக தகவல்களை 1950 என்ற குறுகிய இலக்கத்தினை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
Contact Details
  • 1950/+94 112328301-3
  • No.310, D.R Wijewardhena MW,Colombo 01000
  • info@slpost.lk
More Links
  • Ministry of Mass Media
  • President of Sri Lanka
  • President Media Division
  • Presidential Secretariat
Quick Links
  • About Us
  • Contact Us
  • Services
  • Terms & condition
  • Support

Last Update Date:-2026-03-27

Facebook Twitter Instagram YouTube

© 2026 இலங்கை தபால்

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை

  • English
  • සිංහල
  • தமிழ்
Search