Skip to content
Facebook X Instagram
  • English
  • සිංහල
  • தமிழ்
Dop logo


Opening Hour:
Mon -Sun,8:00 - 16:30
|
Call Us:
1950/+94 112328301-3
|
Email Us:
info@slpost.lk
|
Address:
Postal Headquarters,01000
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை
Facebook X Instagram
Dop logo
  • English
  • සිංහල
  • தமிழ்

பார்சல் அஞ்சல் சேவை (வெளிநாடு)

Send Parcel internationally with us

பார்சல் அஞ்சல் சேவை என்பது  கடிதம்/ ஆவணம் அல்லது  சிறிய பாக்கெட்டுகள் என வகைப்படுத்தப்படாத அஞ்சல் பார்சல்களை விநியோகிப்பதற்காக இலங்கை அஞ்சல் மூலம்  வழங்கப்படும்  ஒரு சேவையாகும்.

இலங்கை அஞ்சல் மூலம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் சேருமிட நாடுகளுக்குப் பொருந்தும் சர்வதேச ஒப்பந்தங்களின்படி, இப்பார்சல்கள் பொதுவாக 30 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். (நாட்டுக்கு நாடு எடை வரம்புகள் வேறுபடும்)

*விலைகள், எடை மற்றும் சேருமிட நாடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

இலங்கை அஞ்சல் வெளிநாட்டு அஞ்சல் கட்டணக் கணக்கீடு >>>
Track your parcel >>>

நிலையை அறிந்து கொள்ளும் சேவை அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, சேருமிட நாட்டின் அதிகாரப்பூர்வ இணைய வலைத்தளங்களால் வழங்கப்படும் நிலையை அறிந்து கொள்ளும் சேவைகளையும் பயன்படுத்தலாம்.

பார்சளின் அளவு

அளவுகள் சேருமிட நாட்டின் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.

அளவுகளின் வரம்புகள்:
பார்சலின் மிகப்பெரிய பக்கத்தின் அதிகபட்ச நீளம்:

சேருமிட நாட்டை அடிப்படையாகக் கொண்டு  100 செ.மீ அல்லது 150 செ.மீ ஆக இருக்கும். (அதிகபட்ச நீள அளவுகளுக்குக் கீழே உள்ள நாடுகளின் பட்டியலைப் பார்க்கவும்.)

பார்சலின் அதிகபட்ச அளவு:பார்சலின் அதிகபட்ச அளவு = சுற்றளவு + நீளம்

பார்சலின் அதிகபட்ச அளவு சேரும் நாட்டைச் சார்ந்துள்ளது. (அதிகபட்ச நீள அளவுகளுக்குக் கீழே உள்ள நாடுகளின் பட்டியலைப் பார்க்கவும்)

EMS/வான்வழி/கடல் வழி/ SAL பார்சல் ஆகியவற்றின் அதிகபட்ச அளவு மற்றும் எடை வரம்புகள் குறிப்பிடப்பட்ட நாடுகளின் பட்டியல் >>>
விசேட அறிவுறுத்தல்கள்
1. தடைசெய்யப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான பொருட்கள்
  • பார்சல்  அஞ்சல் வழியாக அனுப்பப்படும் அனைத்து பொருட்களும் இலங்கை அஞ்சலின் ஒழுங்கு விதிமுறைகளைப் போன்று சேருமிட நாட்டின் விதிமுறைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான பொருட்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல்களுக்கும் இணங்க வேண்டும். எந்தவொரு பார்சலையும் அனுப்புவதற்கு முன்பு இந்த நடைமுறைகளைக் கவனமாகச் சரிபார்க்க வாடிக்கையாளர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தடைசெய்யப்பட்ட பொருட்கள் -check Online >>
Download as pdf >>
Download as .xls >>
2. பொதியிடலின் தேவைகள்.
  • கையாளுதல் மற்றும் போக்குவரத்தில்  தாக்குப் பிடிக்கும் வகையில் அனைத்து பொதிகளும் வலுவான மற்றும் பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டுள்ளது என வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பலவீனமான மற்றும் திருப்தியற்ற முறையில் பொதியிடப்பட்டிருத்தல், பொதிக்குச் சேதம் ஏற்படுவதற்கு அல்லது பொதியை  ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கு  காரணமாக அமையும்.

3. கப்பல் மூலம் அனுப்பப்படும் முறையை அடிப்படையாகக் கொண்ட விநியோகக் காலம்.
  • கடல் மார்க்க  பார்சல் முறையைத் தேர்ந்தெடுக்கும் போது, அதன் விநியோகத்திற்கு விமான பார்சல் சேவையுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக காலம் எடுக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் விநியோகக் காலக்கெடுவிற்கு மிகவும் பொருத்தமான கடல் மார்க்க முறையைத் தெரிவு செய்யவும்.

சேவை முறை

பார்சல் அஞ்சலுக்காக, வாடிக்கையாளர்களுக்கு  வான்வழி / SAL / கடல் வழி/ ஆகிய சேவை முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

வான்வழி (Air) – வேகமான முறை: விமானம் மூலம் அனுப்பப்படும்.

SAL – இட வசதிகள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில்  விமானம் மூலம்     அனுப்பப்படும்.

கடல் வழி(Sea) – நீண்ட விநியோக காலத்துடன்  கப்பல் மூலம் அனுப்பப்படும்.

சேவையுள்ள நாடுகளின் பட்டியல்
வான்வழி பார்சல்>>
SAL பார்சல்>>
கடல் வழி பார்சல்>>

கடல் வழி பார்சல் சேவை வழங்கப்படும் நாடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும்.

பார்சல் அஞ்சல் மூலம் பொருட்களைப் பெறுதல்t
  • இலங்கைக்கு கிடைக்கப் பெறுகின்ற அனைத்து பார்சல்களும் சுங்க பரிசோதனைக்கு மற்றும் இலங்கை சுங்க அனுமதி செயல்முறைக்கு உட்பட்டது.
  • ஒரு பார்சலை விடுவிக்க வேண்டியிருந்தால், இலங்கை அஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் பெறுநருக்கு அதிகாரப்பூர்வ அறிவிபு வெளியிடப்படும்.
  • இவ்வறிவிப்பின் மூலம் பார்சலை விடுவிப்பதற்கான அல்லது பெறுநரின் முகவரிக்கு விநியோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
எங்களைத் தொடர்பு கொள்ள.

துரித அழைப்பு – 1950
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் – (+94) 112320700
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம் (வெளிநாட்டு அஞ்சல் பார்சல் பிரிவு) – (+94) 112449886
அஞ்சல் தலைமையகம் (சர்வதேச அஞ்சல் சேவைகள் பிரிவு) –
011-2328301-3
Email : info@slpost.lk , as.parcel@slpost.lk

Contact Details
  • 1950/+94 112328301-3
  • No.310, D.R Wijewardhena MW,Colombo 01000
  • info@slpost.lk
More Links
  • Ministry of Mass Media
  • President of Sri Lanka
  • President Media Division
  • Presidential Secretariat
Quick Links
  • About Us
  • Contact Us
  • Services
  • Terms & condition
  • Support

Last Update Date:-2026-03-27

Facebook Twitter Instagram YouTube

© 2026 இலங்கை தபால்

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை

  • English
  • සිංහල
  • தமிழ்
Search