அஞ்சல் அட்டைகள்
அஞ்சல் அட்டைகள்( சர்வதேச அஞ்சல் )
Use postcards to send greetings, share travel experiences, or simply stay in touch with friends and family at low cost. Service available only in air mail
- உறுதியான காகிதம் அல்லது அட்டையால் செய்யப்பட்ட, ஒரு பக்கமாக அல்லது இரு பக்கமாக மடிக்கப்பட்ட பிரசுரங்கள் (நன்றாக பசையிட்டு ஒட்டப்பட்ட) வெளிநாட்டு அஞ்சல் அட்டைகளாகக் கருதப்படுகின்றன
- அஞ்சல் அட்டைகள் உறையிடப்படாமல், அதாவது சுற்றும் தாள் அல்லது உறை இல்லாமல் அனுப்பப்பட வேண்டும். அவற்றை விமான அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும். அவற்றை பதிவு அஞ்சலில் அனுப்ப முடியும். இதற்காகக் மேலதிகமாக பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
- அஞ்சல் அட்டைக்கான அஞ்சல் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்படாவிட்டால், அந்த அஞ்சல் அட்டை பெறுநரிடம் சேர்க்கப்படுவதற்கு முன்பு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கூடுதல் கட்டணம், செலுத்த வேண்டிய அஞ்சல் கட்டணத்தின் இரு மடங்காகும். குறைந்தபட்ச கூடுதல் கட்டணம் ரூ. 160/- ஆகும்.
அளவு வரம்புகள்
- அதிகபட்ச அளவு வரம்புகள் பின்வருமாறு,
அதிகபட்ச நீளம் :159mm
அதிகபட்ச அகலம் :100mm
- குறைந்தபட்ச அளவு வரம்புகள் பின்வருமாறு,
குறைந்தபட்ச நீளம் : 140 mm
குறைந்தபட்ச அகலம் : 90 mm
பணம் செலுத்தப்படாத அல்லது குறைவாகப் பணம் செலுத்தப்பட்ட அஞ்சல் அட்டைகள்
- பணம் செலுத்தப்படாத அல்லது குறைவாகப் பணம் செலுத்தப்பட்ட அஞ்சல் அட்டைகளை முதலில் அனுப்புனரால் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
- அனுப்புநரால் நிவர்த்தி செய்யப்பட முடியாத அஞ்சல் அட்டைகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் நிலுவைத் தொகையைப் போல் இருமடங்கு கட்டணம் பெறுநரிடம் அறவிடப்படும்.
- அஞ்சல் அட்டையின் வலது பக்கம் முகவரி மற்றும் அஞ்சல் குறிப்புகள், லேபிள்கள் மற்றும் அஞ்சல் முத்திரைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- முகவரிப் பக்கம் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வெட்டப்பட்ட நிலையில் அஞ்சல் அட்டைகளை அனுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. (அவ்வாறு நடந்திருப்பின், முகவரியை மீண்டும் எழுதலாம்)
- அனுப்புநர், பின்வரும் விதிமுறைகளுக்கு இணங்க அஞ்சல் அட்டையின் இடது மற்றும்/அல்லது பின்புறத்தைப் பயன்படுத்துவார்.
- அஞ்சல் அட்டையுடன் வணிகப் பொருட்கள், மாதிரிகள் அல்லது அது போன்ற பிற பொருட்கள் இணைக்கப்படக் கூடாது.
- இருப்பினும், அஞ்சல் அட்டையில் சித்திரங்கள், புகைப்படங்கள், முத்திரைகள், அல்லது எந்த வகையான காகிதச் சீட்டு அல்லது பிற மெல்லிய பொருள் இணைக்கப்படலாம்.
- இணைக்கப்படும் பொருட்கள், அஞ்சல் அட்டையுடன் முழுமையாக இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுப்பப்படலாம், மேலும் அந்த இணைப்பு அஞ்சல் அட்டையின் தோற்றத்தை மாற்றக்கூடாது.
- முகவரிப் பக்கம் முழுவதுமாக மூடப்பட்டிருந்தால், முகவரியை கொண்ட லேபல்கள் இணைக்கப்படலாம்.
- அஞ்சல் முத்திரைகள் எனத் தவறாக எண்ணப்படக்கூடிய முத்திரைகளை, அஞ்சல் அட்டையின் பின்புறத்தில் மட்டுமே ஒட்ட வேண்டும்.
- அஞ்சல் அட்டையின் முகவரிப் பக்கத்தின் வலது பக்கம், எப்போதும் பெறுநரின் முகவரி, அஞ்சல் முத்திரை மற்றும் அஞ்சல் அறிவுறுத்தல்களுக்காக (அஞ்சல் லேபல் போன்றவை) ஒதுக்கப்பட்டுள்ளது. முத்திரையானது அட்டையின் மேற்புறத்தில் ஒட்டப்பட வேண்டும்.
- அஞ்சல் அட்டையின் இடது பக்கம், அனுப்புனரின் முகவரியை எழுதுவதற்கோ அல்லது மற்றொரு கடிதத்தை எழுதுவதற்கோ பயன்படுத்தப்படுகிறது. அஞ்சல் அட்டையின் பின்பக்கம், தேவையான தகவல்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
- அஞ்சல் கட்டணம் எனத் தவறாகக் கருதப்படக்கூடிய அனைத்து முத்திரைகளும் அஞ்சல் அட்டையின் பின்புறத்தில் மட்டுமே ஒட்டப்பட வேண்டும்.
- விதிமுறைகள் அல்லது அளவு கட்டுப்பாடுகளை மீறும் அஞ்சல் அட்டைகள், அஞ்சலில் கண்டெடுக்கப்பட்டால் அவை கடிதங்களாகக் கருதப்படும்.
- இருப்பினும், அஞ்சல் அட்டையின் பின்புறத்தில் அஞ்சல் முத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பது மட்டுமே செய்யப்பட்ட ஒரே தவறாக இருந்தால், அதற்கான அஞ்சல் கட்டணம் செலுத்தப்படவில்லை எனக் கருதப்படும்.
