Skip to content
Facebook X Instagram
  • English
  • සිංහල
  • தமிழ்
Dop logo


Opening Hour:
Mon -Sun,8:00 - 16:30
|
Call Us:
1950/+94 112328301-3
|
Email Us:
info@slpost.lk
|
Address:
Postal Headquarters,01000
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை
Facebook X Instagram
Dop logo
  • English
  • සිංහල
  • தமிழ்

அஞ்சல் அட்டைகள்

அஞ்சல் அட்டைகள்( சர்வதேச அஞ்சல் )
Use postcards to send greetings, share travel experiences, or simply stay in touch with friends and family at low cost. Service available only in air mail
  • உறுதியான காகிதம் அல்லது அட்டையால் செய்யப்பட்ட, ஒரு பக்கமாக அல்லது இரு பக்கமாக மடிக்கப்பட்ட பிரசுரங்கள் (நன்றாக பசையிட்டு ஒட்டப்பட்ட) வெளிநாட்டு அஞ்சல் அட்டைகளாகக் கருதப்படுகின்றன
  • அஞ்சல் அட்டைகள் உறையிடப்படாமல், அதாவது சுற்றும் தாள் அல்லது உறை இல்லாமல் அனுப்பப்பட வேண்டும். அவற்றை விமான அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும். அவற்றை பதிவு அஞ்சலில் அனுப்ப முடியும். இதற்காகக் மேலதிகமாக பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அஞ்சல் அட்டைக்கான அஞ்சல் கட்டணம் ரூ. 70.00 ஆகும்
No Tracking available
  • அஞ்சல் அட்டைக்கான அஞ்சல் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்படாவிட்டால், அந்த அஞ்சல் அட்டை பெறுநரிடம் சேர்க்கப்படுவதற்கு முன்பு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கூடுதல் கட்டணம், செலுத்த வேண்டிய அஞ்சல் கட்டணத்தின் இரு மடங்காகும். குறைந்தபட்ச கூடுதல் கட்டணம் ரூ. 160/- ஆகும்.
அளவு வரம்புகள்
    • அதிகபட்ச அளவு வரம்புகள் பின்வருமாறு, 

அதிகபட்ச நீளம்               :159mm
அதிகபட்ச அகலம்           :100mm

    • குறைந்தபட்ச அளவு வரம்புகள் பின்வருமாறு,

குறைந்தபட்ச நீளம்                : 140 mm
குறைந்தபட்ச அகலம்            : 90 mm

பணம் செலுத்தப்படாத அல்லது குறைவாகப் பணம் செலுத்தப்பட்ட அஞ்சல் அட்டைகள்
  • பணம் செலுத்தப்படாத அல்லது குறைவாகப் பணம் செலுத்தப்பட்ட அஞ்சல் அட்டைகளை முதலில் அனுப்புனரால் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • அனுப்புநரால் நிவர்த்தி செய்யப்பட முடியாத அஞ்சல் அட்டைகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் நிலுவைத் தொகையைப் போல் இருமடங்கு கட்டணம் பெறுநரிடம் அறவிடப்படும்.
விசேட விதிகள்
  • அஞ்சல் அட்டையின் வலது பக்கம் முகவரி மற்றும் அஞ்சல் குறிப்புகள், லேபிள்கள் மற்றும் அஞ்சல் முத்திரைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முகவரிப் பக்கம் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ வெட்டப்பட்ட நிலையில் அஞ்சல் அட்டைகளை அனுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. (அவ்வாறு நடந்திருப்பின், முகவரியை மீண்டும் எழுதலாம்)
  • அனுப்புநர், பின்வரும் விதிமுறைகளுக்கு இணங்க அஞ்சல் அட்டையின் இடது மற்றும்/அல்லது பின்புறத்தைப் பயன்படுத்துவார்.
  • அஞ்சல் அட்டையுடன் வணிகப் பொருட்கள், மாதிரிகள் அல்லது அது போன்ற பிற பொருட்கள் இணைக்கப்படக் கூடாது.
    • இருப்பினும், அஞ்சல் அட்டையில் சித்திரங்கள், புகைப்படங்கள், முத்திரைகள், அல்லது எந்த வகையான காகிதச் சீட்டு அல்லது பிற மெல்லிய பொருள் இணைக்கப்படலாம்.
    • இணைக்கப்படும் பொருட்கள், அஞ்சல் அட்டையுடன் முழுமையாக இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுப்பப்படலாம், மேலும் அந்த இணைப்பு அஞ்சல் அட்டையின் தோற்றத்தை மாற்றக்கூடாது.
    • முகவரிப் பக்கம் முழுவதுமாக மூடப்பட்டிருந்தால், முகவரியை கொண்ட லேபல்கள் இணைக்கப்படலாம்.
  • அஞ்சல் முத்திரைகள் எனத் தவறாக எண்ணப்படக்கூடிய முத்திரைகளை, அஞ்சல் அட்டையின் பின்புறத்தில் மட்டுமே ஒட்ட வேண்டும்.
  • அஞ்சல் அட்டையின் முகவரிப் பக்கத்தின் வலது பக்கம், எப்போதும் பெறுநரின் முகவரி, அஞ்சல் முத்திரை மற்றும் அஞ்சல் அறிவுறுத்தல்களுக்காக (அஞ்சல் லேபல் போன்றவை) ஒதுக்கப்பட்டுள்ளது. முத்திரையானது அட்டையின் மேற்புறத்தில் ஒட்டப்பட வேண்டும்.
  • அஞ்சல் அட்டையின் இடது பக்கம், அனுப்புனரின் முகவரியை எழுதுவதற்கோ அல்லது மற்றொரு கடிதத்தை எழுதுவதற்கோ பயன்படுத்தப்படுகிறது. அஞ்சல் அட்டையின் பின்பக்கம், தேவையான தகவல்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • அஞ்சல் கட்டணம் எனத் தவறாகக் கருதப்படக்கூடிய அனைத்து முத்திரைகளும் அஞ்சல் அட்டையின் பின்புறத்தில் மட்டுமே ஒட்டப்பட வேண்டும்.
விதிமுறைகள் மற்றும் தடைகளுக்கு முரணான அஞ்சல் அட்டைகள்.
  • விதிமுறைகள் அல்லது அளவு கட்டுப்பாடுகளை மீறும் அஞ்சல் அட்டைகள், அஞ்சலில் கண்டெடுக்கப்பட்டால் அவை கடிதங்களாகக் கருதப்படும்.
  • இருப்பினும், அஞ்சல் அட்டையின் பின்புறத்தில் அஞ்சல் முத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பது மட்டுமே செய்யப்பட்ட ஒரே தவறாக இருந்தால், அதற்கான அஞ்சல் கட்டணம் செலுத்தப்படவில்லை எனக் கருதப்படும்.
Contact Details
  • 1950/+94 112328301-3
  • No.310, D.R Wijewardhena MW,Colombo 01000
  • info@slpost.lk
More Links
  • Ministry of Mass Media
  • President of Sri Lanka
  • President Media Division
  • Presidential Secretariat
Quick Links
  • About Us
  • Contact Us
  • Services
  • Terms & condition
  • Support

Last Update Date:-2026-03-27

Facebook Twitter Instagram YouTube

© 2026 இலங்கை தபால்

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை

  • English
  • සිංහල
  • தமிழ்
Search