கடிதம்-சர்வதேச அஞ்சல்
Send Mail Articles at low Cost - Internationally
- கடிதம் மூலம் அனுப்ப முடியாத பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான அஞ்சல் வகை இது (தபால் மூலம் கடிதங்கள் அல்லது ஆவணங்களை மட்டுமே அனுப்ப முடியும்). இதில் வான் வழியான அஞ்சல் மற்றும் கடல் அஞ்சல் என இரண்டு வகைகள் உள்ளன.
- கடிதங்களை அஞ்சல் பெட்டியில் போடலாம், ஆனால் பின்வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்:.
- கடிதத்தினை பதிவு செய்ய
- கடிதத்தினை காப்புறுதி செய்ய
- முத்திரை இயந்திரங்கள் மூலம் அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்ட கடிதங்களுக்கு
- அஞ்சல் பெட்டியில் பொருந்த முடியாத அளவுக்குப் பெரிய கடிதங்கள்
- அஞ்சலிட்டதற்கான சான்றிதழில் அனுப்பப்பட்ட கடிதங்கள்
- விரைவு கடிதங்கள்
- வெளிநாட்டு மொத்த அஞ்சல் வசதியின் கீழ் அனுப்பப்பட்ட கடிதங்கள்
- அதிக மதிப்புள்ள முத்திரையிடப்பட்ட கடிதங்கள்
- கருமபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் அதிக மதிப்புள்ள முத்திரையிடப்பட்ட பொருட்களின் மீதான முத்திரைகள், அப்பொருட்களைப் கையளிக்கும் நபரின் முன்னிலையில் கருமபீட உத்தியோகத்தறினால் இரத்து செய்யப்படும். இப்பொருட்கள் எக்காரணத்திற்காகவும் திருப்பி வழங்கப்பட மாட்டாது. அத்துடன் கருமபீடம் பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும் எந்த நேரத்திலும் இப்பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அளவு மற்றும் எடை வரம்புகள்
- அதிகபட்ச அளவு வரம்புகள் பின்வருமாறு,
அதிகபட்ச நீளம் + அகலம் + உயரம் :900mm
மிக நீளமான பக்கத்தின் அதிகபட்ச நீளம் :610mm
சுருள் வடிவில் இருந்தால்,
அதிகபட்ச நீளம் + (விட்டம் x 2) : 1037 mm
மிக நீளமான பக்கத்தின் அதிகபட்ச நீளம் : 889 mm
- குறைந்தபட்ச அளவு வரம்புகள் பின்வருமாறு,
குறைந்தபட்ச நீளம் : 140 mm
குறைந்தபட்ச அகலம் : 90 mm
நீளமான, சதுரமான, உறுதியான ஒரு கார்ட்போர்ட்தயாரிப்பாயின் குறைந்தபட்ச அளவு வரம்புகள் பின்வருமாறு,
இரண்டு அடுத்தடுத்த பக்கங்களின் நீளங்களின் கூட்டுத்தொகை : 160 mm
குறுகிய பக்கத்தின் நீளம் : 40 mm
- அதிகபட்ச எடை- 2kg
கட்டணம் செலுத்தப்படாத அல்லது குறைவாகச் கட்டணம் செலுத்தப்பட்ட கடிதங்கள்
- கட்டணம் செலுத்தப்படாத அல்லது குறைவாகப் கட்டணம் செலுத்தப்பட்ட கடிதங்களுக்கு, அனுப்புநரைத் தொடர்புகொள்வதன் மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இருப்பினும், அனுப்புநரைத் தொடர்புகொள்வதில் தாமதங்கள் ஏற்படுமாயின், விமான அஞ்சல் மூலம் அனுப்புவதற்காகச் சமர்ப்பிக்கப்படும் கடிதங்கள் தொடர்பாகப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- விமான அஞ்சல் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், பொருள் கடல் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்பதுடன், கடல் அஞ்சல் கட்டணத்தைப்போல் இருமடங்கு கட்டணம் கடித உரிமையாளரிடமிருந்து அறவிடப்படும்.
- விமான அஞ்சல் கட்டணத்தின் ஒரு பகுதி செலுத்தப்பட்டிருப்பின் மற்றும் அவ்வாறு செலுத்தப்பட்ட கட்டணம் உண்மையான விமான அஞ்சல் கட்டணத்தில் 75%க்குக் குறையாமல் இருந்தால், அந்தப் பொருள் கடல் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்பதுடன், விமான அஞ்சல் கட்டணத்தைப் போன்ற இருமடங்கு கட்டணம் கடித உரிமையாளரிடமிருந்து அறவிடப்படும்.
- விமான அஞ்சல் கட்டணத்தின் ஒரு பகுதி செலுத்தப்பட்டிருப்பின் மற்றும் அவ்வாறு செலுத்தப்பட்ட கட்டணம் உண்மையான விமான அஞ்சல் கட்டணத்தில் 75%-க்கும் குறைவாக இருந்தால், அந்தப் பொருள் கடல் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்பதுடன், கடல் அஞ்சல் கட்டணத்தில் குறைவாக செலுத்தப்பட்ட தொகையைப் போன்ற இருமடங்கு கட்டணம் கடித உரிமையாளரிடமிருந்து அறவிடப்படும்.
- மேற்கண்ட நேர்வுகளில் செலுத்தப்படாத அல்லது குறைவாகச் செலுத்தப்பட்ட கடிதங்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச கூடுதல் கட்டணம் (surcharge) நாட்டிற்கு நாடு வேறுபடும் என்பதோடு இலங்கையில் ஆயின் அது ரூ. 160/- ஆகும்.
- அனுப்புனரால் திருத்தங்களை மேற்கொள்ள முடியாத கடல் அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு வழங்கப்பட்ட கடிதங்களுக்கான, குறைந்தபட்ச அஞ்சல் கட்டணம் அல்லது கட்டணத்தின் நிலுவைத் தொகையின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் அறவிடப்படும்.
- கடிதத்தின் உரிமையாளர் அல்லது அவருடன் வசிப்பவர்களைத் தவிர மற்றொரு நபரினது தனிப்பட்ட வகையிலான கடிதம், குறிப்பு அல்லது ஆவணம் எதுவும் அக்கடிதத்தில் உள்ளடங்கக் கூடாது.
- கடிதத்தின் மேல் வலது பக்கம் அஞ்சல் கட்டணத்திற்காகவும், கீழ் வலது பக்கம் பெறுநரின் முகவரிக்காகவும், கீழ் இடது பக்கம் அனுப்புநரின் முகவரிக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும். அனுப்புநரின் முகவரியை முன்பக்கத்தில் எழுத முடியாவிட்டால், அதை பின்பக்கத்தில் எழுத வேண்டும். (அனுப்புநரின் முகவரி கட்டாயமில்லை.)
- நாணயங்கள் (வங்கி நோட்டுகள், பண நோட்டுகள், மாற்று உண்டியல்கள் போன்றவை) மற்றும் நகைகள் (தங்கம், வெள்ளி, பிளாட்டினம் அல்லது அவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், இரத்தினக் கற்கள், தங்கம் அல்லது வெள்ளி நகைகள் போன்றவை) கடிதத் அஞ்சல் மூலம் அனுப்பப்படலாம், ஆனால் அவை முத்திரையிடப்பட்ட பதிவு அஞ்சல் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும்.
- ஒரு கடிதத்தின் தோற்றம் அதனை மற்றொரு வகை அஞ்சல் பொருளாகத் தவறாக அடையாளம் காணக்கூடும் என்பதனால் அத்தகைய கடிதத்தை அடையாளம் காணும் வகையில், அதன் முன்பக்கத்தில் ‘கடிதம்’ என்று எழுதப்பட வேண்டும்.
- கடிதங்களைப் பதிவு செய்யலாம். அவற்றுக்குக் காப்புறுதி செய்யலாம். அஞ்சல் கட்டண சான்றிதழ்களைப் பெறலாம்.
- அவை பல்வேறு காலநிலை நிலைகளில் நீண்ட தூரம் பயணிப்பதாலும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பல்வேறு இடங்களில் பரிமாற்றம் செய்யப்படுவதாலும், அவற்றைச் சிறப்பாகப் பொதி செய்து அனுப்புவதற்குத் தயார்ப்படுத்த வேண்டும்.
- விதிமுறைகள் மற்றும் தடைகளுக்கு முரணான கடிதங்கள், அவற்றை கடிதம் மூலம் அனுப்புவதற்கு பணம் செலுத்தப்பட்டிருந்தாலும், அவற்றை மாற்றுவதற்கு முடியுமாயின் பார்சல் அஞ்சலாக மாற்றப்படும்.
- இருப்பினும், அவ்வாறான கடிதங்கள் அளவு வரம்புகளை மீறினால், அல்லது பார்சல்களாக அனுப்புவதற்குப் போதுமான அளவு பொதி செய்யப்படாமல் இருந்தால், அல்லது அத்தகைய பொருட்களை பார்சல் அஞ்சல் சேவையினால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், அவை அனுப்பப்படமாட்டாது.
- பிற காரணங்களுக்காகப் (மீன் போன்ற விரைவில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களைக் கொண்டிருப்பது போன்ற) பார்சல் அஞ்சலுக்கு மாற்றுவதற்கு பொருத்தமற்ற மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதோடு விரும்பத்தகாத தன்மை கொண்ட கடிதங்கள் உடனடியாக அழிக்கப்படுகின்றன.
